புனே மாநகராட்சி மேயராக பா.ஜனதாவின் முரளிதர் மொகோல் தேர்வு
புனே மாநகராட்சி மேயராக பா.ஜனதாவின் முரளிதர் மொகோல் தேர்வு செய்யப்பட்டார்.
புனே,
புனே மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் மேயர் பதவிக்கு முரளிதர் மொகோலும், துணை மேயர் பதவிக்கு சரஸ்வதி ஷெண்டேவும் போட்டியிட்டனர்.
இதேபோல தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் கதம் மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சியின் சந்த்பி நடாப் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
நேற்று நடந்த வாக்கெடுப்பின் போது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மேயர், துணை மேயர் வேட்பாளர் களுக்கு 97 ஓட்டுகள் கிடைத்தன. 10 கவுன்சிலர்களை கொண்ட சிவசேனா ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் மேயர், துணை மேயர் வேட்பாளர்களுக்கு 59 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதன் மூலம் பா.ஜனதாவை சேர்ந்த முரளிதர் மொகோல் புனே மாநகராட்சி மேயராகவும், சரஸ்வதி ஷெண்டே துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இதேபோல பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி மேயராக பா.ஜனதாவை சேர்ந்த உஷா என்ற மாய் தோரேவும், துணை மேயராக துஷார் ஹின்ஹேவும் தேர்வு செய்யப்பட்டனர்.