திருவொற்றியூரில் 27 டன் பிரியாணி அரிசியுடன் லாரி கடத்தல் டிரைவருக்கு வலைவீச்சு

திருவொற்றியூரில் 27 டன் பிரியாணி அரிசியுடன் டாரஸ் லாரியை கடத்திச்சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-11-20 22:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் திருவொற்றியூர் மணலி சாலையில் உள்ள கான்கார்ட் மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 27 டன் எடை கொண்ட 1,080 பிரியாணி அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது.

லாரி கிளினர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று இருந்தார். அப்போது லாரி டிரைவர் கே.கே.சாமி, திடீரென 27 டன் பிரியாணி அரிசியுடன் நின்ற லாரியை கடத்திச்சென்றுவிட்டார்.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் மாரிமுத்து, பல இடங்களில் தேடியும் லாரியையும், டிரைவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து தரும்படி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாரிமுத்து புகார் செய்தார்.

அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு பிரியாணி அரிசியுடன் லாரியை கடத்திச்சென்ற டிரைவர் கே.கே.சாமியையும், கடத்தப்பட்ட லாரியையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்