ஹிட்லரின் தங்கை போல் கிரண்பெடி செயல்படுகிறார் நாராயணசாமி ஆவேசம்
ஹிட்லரின் தங்கை போல் கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திராகாந்தி சிறந்த ராஜதந்திரியாக திகழ்ந்தார். மன்னர் மானிய முறையை ஒழித்தார். அதனால்தான் கிராமப்புற மக்கள் இன்னும் இந்திராகாந்தி உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்புகிறார்கள்.
நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் காலத்தில்தான் நாட்டில் வளர்ச்சி வந்தது. அவர்களது சாதனைகளை மூடி மறைக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டின் பொருளாதார சரிவினை கண்டித்து வருகிற 30-ந்தேதி பேரணி நடத்த சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் புதுவை காங்கிரசாரும் கலந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு வருகிற 25-ந்தேதிக்குள் மாநில அளவில் நாம் போராட்டம் நடத்த வேண்டும்.
புதுவை மாநிலத்தில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. கவர்னரின் அதிகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீடு விசாரணை நாளை நடக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு இலவசம், துணிமணிகள் கொடுப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு 39 கோப்புகளை கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலதாமதம் செய்தார்.
இந்த அமைச்சரவையை கவர்னர் கொச்சைப்படுத்துகிறார். அதிகாரிகளை அழைத்து வசைபாடுகிறார். மிரட்டுகிறார். நாங்கள் விதிமுறைப்படிதான் அதிகாரிகளை வேலை செய்யவேண்டும் என்கிறோம். ஆனால் முடிவுகளை எடுக்க இவர் யார்? அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் அமைச்சர்களின் சொல்கேட்டுதான் செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அவர்களை அழைத்து கவர்னர் தர்பார் நடத்துகிறார். தனியார் நிறுவனம் குப்பை அள்ளுவதற்கு மாதந்தோறும் ரூ.2 கோடி வழங்கி வருகிறோம். அந்த தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார். இதில் என்ன உள்நோக்கம்?
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது தந்தைக்கு சொந்த இடத்தில் சிலை வைத்துள்ளார். அவர் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? கவர்னர் கிரண்பெடி புதுவை மக்களைப்பற்றி கவலைப்படாமல் உட்கார்ந்த இடத்தில் தர்பார் செய்கிறார். கோர்ட்டு உத்தரவுகளை மதிக்காதவர்கள் ஜெயிலுக்கு போகிறார்கள். அதேபோல் அதிகாரிகள் சிலருக்கு வேட்டு வைப்பேன்.
நான் சிங்கப்பூருக்கு யார் அப்பன் வீட்டு பணத்திலும் செல்லவில்லை. எனது சொந்த பணத்தில் சென்றேன். உங்களிடம் (கவர்னரிடம்) அனுமதி வாங்க வேண்டும் என்று விதி உள்ளதா? தரமே இ்ல்லாமல் உயர் பதவிக்கு வந்துவிட்டார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போன்று செயல்படுகிறார்.
மக்கள் எங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டார்கள். நாங்கள்தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். இடையில் நீங்கள் யார்? அவர் கூப்பிட்டவுடன் செல்ல நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை. அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டால் சொல்வோம்.
பதவிக்கு வந்தோமோ, வேலை செய்தோமா? என்றிருக்கவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதேபோல் கவர்னர்களின் செயல்பாடு இல்லை. இதற்கெல்லாம் மேலே உள்ள பாரதீய ஜனதா ஆட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் காரணம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.