காரைக்குடி அருகே மேடு பள்ளமான மயானப் பாதையை சீரமைக்ககோரி நாற்று நடும் போராட்டம்
காரைக்குடி அருகே மேடு பள்ளமான மயானப் பாதையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி உட்பட்ட என்.ஜி.ஓ. காலனி, தாசில்தார் நகர், அருணா நகர், போக்குவரத்து நகர், கிராம நிர்வாக அலுவலர் காலனி, அரசு அலுவலக உதவியாளர் காலனி, கே.கே. நகர், கம்பன் நகர் பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சில வருடங்களாகவே சேதமாகி போக்குவரத்திற்கு பயனற்றதாகவே உள்ளது.
மழைக்காலங்களில் தோன்றும் திடீர் பள்ளங்கள், அவற்றில் தேங்கியுள்ள தண்ணீர் இவற்றை அறியாமல் விபத்தில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் சாலை இணைப்பே துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் மயானத்திற்கு உடல்களை கொண்டு செல்வதற்கு சமூக ஆர்வலர்கள் வாங்கி கொடுத்த பிரேதம் சுமக்கும் வண்டிகள் பயன்படுத்த முடியாமல் துருப்பிடித்த நிலையில் கிடக்கின்றன.
இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல தோளில் சுமந்துகொண்டு மேடு பள்ளங்களை கடந்து தண்ணீரில் நீந்தி சேறும் சகதியுமான தரையில் நடந்து சென்று வருகின்றனர்.
இதனால் வயதானவர்கள், உற்றார் உறவினர்களின் இறுதிக்காரியத்தில் மயானம் சென்று கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
இந்தநிலை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சேறும் சகதியுமாக இருக்கும் அப்பகுதியில் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தபோது அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. இந்தநிலையில் நேற்று அப்பகுதி மக்கள் கம்பன் நகர் நுழைவு வாயில் உள்ள பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதியில் உள்ள சமூக நல ஆர்வலர் ஆதிஜெகன்நாதன் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னிபாலா, முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் எங்கள் பகுதிக்கு வேறு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுங்கள் என கேட்கவில்லை. மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து கொடுக்குமாறு கேட்கிறோம். ஆனால் அதிகாரிகள் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை, இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்து விட்டு வீடு திரும்புவதே பெரிய சவாலாக இருக்கிறது.
என வே அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சகதியான பாதையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.