இ.சி.ஜி. எந்திரம் தீப்பிடித்ததில் கையை இழந்த குழந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - மாநகராட்சி கமிஷனரிடம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
கே.இ.எம். ஆஸ்பத்திரியில் இ.சி.ஜி. எந்திரம் தீப்பிடித்ததால் கையை இழந்த குழந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசியிடம் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
மும்பை,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் பன்னாலால். இவரது 2 மாத குழந்தை பிரின்ஸ் ராஜ்பார் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தை பிரின்ஸ் ராஜ்பாரை மும்பை கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அவசர சிகிச்சை பிரிவில் இ.சி.ஜி. எந்திரம், அதன் மானிட்டரில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த துயர சம்பவத்தில் 18 முதல் 22 சதவீதம் தீக்காயம் அடைந்த குழந்தை அதன் ஒரு கையை இழக்க நேரிட்டது.
ஆஸ்பத்திரி எந்திரம் தீப்பிடித்ததால் கையை இழந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் சயான் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ.வான கேப்டன் தமிழ்ச்செல்வன், குழந்தையின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசியிடம் வலியுறுத்தி இருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. குழந்தைக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கமிஷனர் பிரவின் பர்தேசியை குழந்தையின் குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார். அப்போது கமிஷனர் கையை இழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கொடுக்க மாநகராட்சி ஒப்புதல் அளித்து இருப்பதாக கூறி, அதற்கான காசோலையை கொடுத்தார்.
எனினும் கேப்டன் தமிழ்ச்செல்வன் குறைந்தபட்சம் குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கமிஷனரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து கமிஷனர், கையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு அதிக தொகை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கேப்டன் தமிழ்ச்செல்வனிடம் உறுதி அளித்தார்.