மோட்டார் சைக்கிளை வழிமறித்து: டிராவல்ஸ் நிறுவன அதிபர் உள்பட 2 பேர் மதுபாட்டிலால் தாக்கப்பட்டனர் - வாலிபருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளை வழிமறித்து டிராவல்ஸ் நிறுவன அதிபர் உள்பட 2 பேரை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை சாரம் எல்லையம்மன் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 25). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர் கிரிராஜன் (29) என்பவருடன் படம் பார்த்துவிட்டு 45 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் செல்வ மணியை திடீரென்று வழி மறித்து தகராறில் ஈடுபட்டார்.
இதை தட்டிக்கேட்ட செல்வமணியை மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கினார். இதனை தடுக்க வந்த கிரிராஜனும் தாக்கப்பட்டார். பின்னர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு மணிகண்டன் தப்பிச்சென்றார்.
பீர் பாட்டிலால் தாக்கியதில் செல்வமணிக்கு நெற்றியிலும், கிரிராஜனுக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் செல்வமணி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.