தூத்துக்குடியில் வாட்ஸ்அப்பில் அவதூறு வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

தூத்துக்குடியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக பேசி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட, மற்றொரு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-17 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக பேசி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட, மற்றொரு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

அவதூறு வீடியோ

தூத்துக்குடியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக ஒரு பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் (வாட்ஸ்அப்பில்) வைரலாக பரவி வந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி திம்மராஜபுரத்தை சேர்ந்த வக்கீல் மணிகண்டன் என்பவர், தனது சமூகத்தை பற்றி அவதூறாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி வடபாகம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இளம்பெண் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி அய்யலுசந்து பகுதியை சேர்ந்த சுதா(வயது 31) என்பவர் அந்த வீடியோ பதிவு செய்து வெளியிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்