பா.ஜனதாவில் சேர்வதற்கு முந்தைய நாள் இரவு தூக்கம் வரவில்லை ரமேஷ் ஜார்கிகோளி தகவல்

பா.ஜனதாவில் சேர்வதற்கு முந்தைய நாள் இரவு தூக்கம் வரவில்லை என்று கோகாக் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

Update: 2019-11-17 22:30 GMT
பெங்களூரு, 

பா.ஜனதாவில் சேர்வதற்கு முந்தைய நாள் இரவு தூக்கம் வரவில்லை என்று கோகாக் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

ரமேஷ் ஜார்கிகோளி

காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி கோகாக் கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூக்கம் வரவில்லை

சித்தராமையா கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் தனது கைக்குள் வைத்துள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்க்கப்பட்டது. மல்லிகார்ஜூன் கார்கே அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட டி.கே.சிவக்குமார் தான் தலைவராக இருக்கிறார் அல்லவா. இதனால் காங்கிரஸ் கட்சி அதாளபாதாளத்துக்கு சென்றுள்ளது.

பா.ஜனதா கட்சியில் நான் சேர்வதற்கு முந்தைய நாள் இரவு எனக்கு ஒருநிமிடம் கூட தூக்கம் வரவில்லை. ஏனென்றால் நான் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியின் தீவிரமான பற்றாளன். காங்கிரஸ் எனது கட்சியாக இருந்தாலும் கூட அதை விட்டு பிரிவது தூரதிர்ஷ்டவசமாக இருந்தது.

பள்ளிக்காலத்திலேயே பிரச்சினை

எனக்கும், சகோதரர் சதீஷ் ஜார்கிகோளிக்கும் பள்ளி நாட்களில் இருந்தே பிரச்சினை உள்ளது. சதீஷ் ஜார்கிகோளியுடன் 20 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. அவருடன் லகன் ஜார்கிகோளியும்(இன்னொரு சகோதரர்) சேர்ந்துள்ளார். லகன் ஜார்கிகோளி எனக்கு துரோகம் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்