சேந்தமங்கலம் அருகே பெண் கொலையில் கணவர் உள்பட 2 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே, பெண் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா (38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இரு வீட்டாரின் உறவினர்கள் இருவரையும் சேர்ந்து வாழ வைக்க பலமுறை பஞ்சாயத்து பேசியும் பலன் இல்லை.
இந்த நிலையில் மோகன், கவுசல்யா வசித்து வந்த வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மோகன், கவுசல்யாவை தடியால் அடித்தும், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியும் கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இதற்கிடையில் மோகன் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
என்னுடைய மனைவி கவுசல்யா எனது மாமனார் நிலத்தை விற்றதில் கிடைத்த பணத்தில் சுமார் ரூ.50 லட்சம் வரை வாங்கி வங்கியில் டெபாசிட் செய்து கொண்டாள். அது முதல் அவள் என்னை மதிப்பதில்லை. அந்த பணத்தை கேட்டது தொடர்பாக எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் எனது குழந்தைகளையும் கவுசல்யா சரிவர கவனிப்பதில்லை தொடர்ந்து என்னை அலட்சியப்படுத்தி வந்தாள். அதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் உறவினர் ஒருவரிடம் தொடர்பு வைத்திருந்ததும், அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி வந்ததையும், அவருக்கு பண உதவி செய்து வந்ததையும் அறிந்தேன். இதனால் மேலும் ஆத்திரம் அதிகமாகி, சம்பவத்தன்று கவுசல்யாவை தடியால் அடித்தும், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மோகனின் தம்பி தங்கவேலு (43) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.