பரங்கிப்பேட்டை அருகே, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பரங்கிப்பேட்டை அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சத்யா(வயது 20). இவருடைய தாய், தந்தை இறந்து விட்டனர். சத்யா, தனது தம்பியுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இருவரையும் அவருடைய சித்தப்பா புவியரசன் கவனித்து வருகிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சத்யா, எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சத்யாவும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் புஷ்பராஜ்(22) என்பவரும் காதலித்து வந்தனர். புஷ்பராஜ், பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சத்யா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புஷ்பராஜியிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் அவரோ, திருமணம் செய்து கொள்வதாக கூறி நாட்களை கடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை புஷ்பராஜ், திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சத்யாவிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து புவியரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்தும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புவியரசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.