டி.என்.பாளையம் அருகே நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது; தொழிலாளி சாவு
டி.என்.பாளையம் அருகே நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
டி.என்.பாளையம்,
அந்தியூரில் இருந்து கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை சென்று கொண்டிருந்தது. சரக்கு ஆட்டோவை கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 33) என்பவர் ஓட்டி வந்தார்.
கண்ணாடி சரியாமல் இருக்க அதை சுற்றி கயிறு கட்டப்பட்டு இருந்தது. சரக்கு ஆட்டோ அத்தாணி அருகே உள்ள வரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கண்ணாடியை சுற்றி கட்டிய கயிற்றின் பிடி தளர்ந்தது. இதனால் டிரைவர் சரக்கு ஆட்டோவை நிறுத்தினார்.
அதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் பின்னால் இருந்த ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான நரசிங்க மூர்த்தி (40), துடியலூர் ஊரைச் சேர்ந்த நேரு (55) ஆகிய 2 பேரும் கீழே இறங்கினர். அவர்கள் 2 பேரும் கயிற்றை இறுக்கி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நரசிங்க மூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நேரு படுகாயம் அடைந்தார்.
விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பித்து சென்றுவிட்டார். படுகாயம் அடைந்த நேருவை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.