சுஜித் மறைவுக்காக மாதர் சம்மேளனத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி திருவாரூரில் நடந்தது

சுஜித் மறைவுக்காக திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் தங்களது போராட்டத்தை ரத்து செய்ததுடன், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-10-29 22:30 GMT
திருவாரூர்,

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

மதுபான கடைகளை மூட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியால் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் சுஜித்தின் மறைவையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுலோக்‌ஷனா, செயலாளர் தமயந்தி, தேசியக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அம்புஜம், பாஸ்கரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்