குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு மது விற்பனை
குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2¼ கோடி முதல் 2¾ கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்காலங்களில் இந்த விற்பனை ரூ.3 கோடிக்கு அதிகமாக இருக்கும்.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய நாளும் குமரி மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது வகைகளை காட்டிலும் பீர் வகைகள்தான் அதிகம் விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.8 கோடிக்கு விற்பனை
26-ந்தேதி மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் ஏராளமானோர் பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்று மதுபானங்களை அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களும் மதுபான பிரியர்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது.2 நாட்களும் மதுபானங்கள் விற்பனையான விவரம் வருமாறு:-
கடந்த 26-ந் தேதி ரூ.3 கோடியே 99 லட்சத்து 32 ஆயிரத்து 240-க்கும், தீபாவளி தினத்தன்று ரூ.4 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 950-க்கும் என மொத்தம் 8 கோடியே 5 லட்சத்து 2 ஆயிரத்து 190-க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்றும், அதற்கு முந்தைய நாளும் ரூ.7½ கோடிக்குத்தான் மதுபானம் விற்பனையானது. எனவே கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.