வலங்கைமானில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து போலீசார் விசாரணை

வலங்கைமானில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-28 22:15 GMT
வலங்கைமான்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருடைய மகன் வைரவேல்(வயது37). கூலி தொழிலாளி. இவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் தீபாவளி அன்று நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். மேலும் சிலர் அந்த பகுதியில் மதுகுடித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள், மதுபாட்டிலை உடைத்து வைரவேல் தலையில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வைரவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரவேலை மதுபாட்டிலால் குத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்