சேலம் ஆஞ்சநேயர் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார்

சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார்.

Update: 2019-10-26 23:00 GMT
சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந் தேதி சேலம் வந்தார். நேற்று முன்தினம் அவர் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். நாளை(திங்கட்கிழமை) வரை அவர் சேலத்தில் தங்கியிருக்கிறார்.

இந்தநிலையில் நேற்று காலை சோனா கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் அவர் அங்கு சாமி கும்பிட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் கோகுலம் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மாணவிக்கு வாழ்த்து

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த எஸ்.ஆர்.பாயல்(வயது 14) என்ற மாணவி புனேயில் நடந்த தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் அவர் அடுத்த மாதம்(நவம்பர்) புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியிலும், அடுத்த ஆண்டு நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஆர்.பாயல் நேற்று நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சருடைய இல்லத்திற்கு வந்தார். பின்னர் அந்த மாணவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தான் பெற்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அந்த மாணவியை முதல்-அமைச்சர் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்