ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்து விழுந்ததால் குழந்தையை மீட்கும் முயற்சியில் பின்னடைவு அமைச்சர் பேட்டி
ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்து விழுந்ததால் குழந்தையை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
மணப்பாறை,
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 11 குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பல மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை குழிக்குள் கிடந்ததால் குழந்தையின் தோல் மென்மையாக மாறிவிட்டது. அதனால் குழந்தையின் உடலில் கயிறு கட்டி தூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சபட்ச அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குழந்தையை மீட்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. குழந்தையை கயிறு கட்டி மீட்க முயன்ற 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.
அதிகாலை 5.30 மணிக்கு பிறகு குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும், சத்தமும் வரவில்லை. குழந்தையின் கைகளை தாங்கி பிடித்து இருந்த கயிறு நழுவியதால் 30 அடி ஆழத்தில் இருந்து 80 அடி ஆழத்துக்கு, குழந்தை சென்றுவிட்டது. அதேநேரத்தில் குழந்தையின் மீது சிறிது மண் சரிந்து விழுந்தது. இதனால் குழந்தையை மீட்கும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
தொழில்நுட்ப எந்திரங்கள்
மீட்பு படையினர் வருவதற்கு தாமதம் ஆகவில்லை. ஆனால் அவர்களது பயணநேரம் மட்டுமே அதிகமானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினர் ஐ.ஐ.டி.யில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். அப்படிப்பட்ட நபர்களைதான் மீட்கும் பணிக்கு மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பரிந்துரை செய்தனர். குழந்தையின் உயிர் என்பதால் மிகவும் துல்லியமாகவும், கவனமாகவும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இங்கு போடப்பட்ட ஆழ்துளை கிணறு மிகவும் சிறிய அளவிலானது. இதுவே பெரிய ஆழ்துளை கிணறாக இருந்து இருந்தால் குழந்தையை மீட்டு இருப்போம். அதிகாலை 5.30 மணி அளவில் குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மிகவும் பதைபதைப்பு ஏற்பட்டது. வருங்காலத்தில் இதுபோல் நடக்காத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட கலெக்டர் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது. தற்போது, இந்த குழி சரியாக மூடப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைகளை மீட்க தேவையான தொழில்நுட்ப எந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.