பெருந்துறையில் ஆட்டோவுக்கு தீ வைத்து எரித்ததாக 3 பேர் கைது
பெருந்துறையில் ஆட்டோவுக்கு தீ வைத்து எரித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துைற,
ெபருந்துைறயை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். அதை பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள நிறுத்தத்தில் நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார்.
பெருந்துறை சிலேட்டர் நகரை சேர்ந்த மெல்வின் (27) என்பவருக்கும், ரிச்சர்ட்டுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில்நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் ஆட்ேடா நிறுத்தத்துக்கு வந்த மெல்வின் ரிச்சர்ட்டின் ஆட்டோவுக்கு திடீரென தீவைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் , ஆட்டோ எரிந்து நாசம் ஆனது.
இதுபற்றி ரிச்சர்ட் பெருந்துறைபோலீசில்புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பெருந்துறைஅருகேஉள்ள நல்லாம்பட்டியை சேர்ந்த விஜயபாலன் (58), தப்பி ஓடிய மெல்வினின் தம்பி மேத்யு (26) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் ரிச்சர்ட்டின் ஆட்டோைவ மெல்வின் எரித்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை துடுப்பதியில் நின்றுகொண்டு இருந்த மெல்வின், மேத்யு, விஜயபாலன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.