வங்கியில் கடன் பெற்று சென்னை தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி; உறவினர் மீது வழக்கு
வங்கியில் கடன் பெற்று சென்னை தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக அவரது உறவினர் மற்றும் வங்கி மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அன்புக்கரசன். தொழிலதிபர். இவருக்கு சொந்தமான இடம் புதுவையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லாஸ்பேட்டை நந்தா நகரில் வசித்து வரும் இவரது உறவினர் பாரதிக்கு பணம் தேவைப்பட்டது. எனவே அவர் அன்புக்கரசனிடம் ரூ.40 லட்சம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புதுவை நேரு வீதியில் தனக்கு சொந்தமான இடத்தை வங்கியில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அன்புக்கரசன் கூறினார். அதற்கான ஆவணங்களையும் பாரதியிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் புதுவையில் உள்ள ஒரு வங்கியில் பாரதிக்கு அன்புக்கரசன் ரூ.40 லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். இந்தநிலையில் பாரதி அன்புக்கரசனின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கி மேலாளர் உதவியுடன் மேலும் ரூ.30 லட்சம் கடன் வாங்கினார். அதற்கான வட்டி, அசலை செலுத்தாததால் அன்புக்கரசனுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அவரது சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசன் உடனே வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போதுதான் தனது கையெழுத்தை போலியாக போட்டு தனக்கு தெரியாமல் பாரதி கூடுதலாக ரூ.30 லட்சம் கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அன்புக்கரசன் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி பெரியகடை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாரதி, வங்கியின் மேலாளர் ஆகியோர் மீது பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.