காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியா? சிவசேனா வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் பரபரப்பு
சிவசேனா வெளியிட்ட கேலிச்சித்திரம் மூலம் அந்த கட்சி பா.ஜனதாவைஓரம்கட்டி விட்டுகாங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன்சேர்ந்து ஆட்சிஅமைக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
சிவசேனா வெளியிட்ட கேலிச்சித்திரம் மூலம் அந்த கட்சி பா.ஜனதாவைஓரம்கட்டி விட்டுகாங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன்சேர்ந்து ஆட்சிஅமைக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மை இல்லை
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. மற்றொரு கூட்டணியில் காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளன.
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க அந்த கட்சிக்கு சிவசேனாவின்ஆதரவு கட்டாயமாகி உள்ளது. இதில் சிவசேனாஆட்சி அதிகாரத்தில் சமபங்கு அளிக்க வேண்டும் என்று பா.ஜனதாவைவலியுறுத்தி உள்ளதால் புதிய அரசு பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
சர்ச்சை கேலிச்சித்திரம்
இந்தநிலையில் சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. பா.ஜனதாவை கிண்டல் செய்யும் வகையிலான கேலிச்சித்திரம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளதுசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரத்தில், புலி (சிவசேனாவின் அடையாளம்) கழுத்தில் கெடிகாரம் (தேசியவாத காங்கிரஸ் சின்னம்) தொங்குவதை போலவும், அந்த புலிதாமரையை (பா.ஜனதாவின் சின்னம்) முகர்ந்து பார்ப்பது போலவும் உள்ளது.
இந்த படத்தை வெளியிட்டுள்ள அவர், ‘‘கேலிச்சித்திரம் அருமையாக உள்ளது! பரவாயில்லை. இது தீபாவளி சமயம் தானே’’ என குறிப்பிட்டு உள்ளார்.
ஆட்சி அதிகாரம்
ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. முதல்-மந்திரி பதவியையும் சுழற்சி முறையில் இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சிவசேனா வலியுறுத்துகிறது.
இதற்கு பா.ஜனதா உடன்படாவிட்டால் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கைகோர்க்க சிவசேனா தயாராக உள்ளது போன்ற தகவலை இந்த கேலிச்சித்திரம் வெளிப்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோல ஆட்சி அதிகாரத்திற்கான திறவுகோல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வசம் இருப்பதாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆட்சியமைப்பதற்காக சிவசேனாவுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மறுத்து உள்ளனர்.