வெங்கல் பஜார் வீதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
வெங்கல் பஜார் வீதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல், புன்னப்பாக்கம், அத்தங்கி காவனூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து வெங்கல் மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த புதன்கிழமை இந்த பிரச்சினையை முன்வைத்து கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வெங்கல் கிராம மக்கள் முயற்சி செய்தனர். அப்போது விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக போலீசார் முன்னிலையில் உறுதி கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், மின்வெட்டு என்பது தொடர்கதையாகவே இருந்தது.
நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பல முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் மின்சாதன பொருட்கள் பழுதானது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கானோர் வெங்கல் பஜார் வீதியில் தாமரைப்பாக்கம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக மின் வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயன், கோட்ட பொறியாளர் மூர்த்தி ஆகியோரிடம் போலீசார் மின்தடை பிரச்சினை குறித்தும் பொதுமக்களின் சாலைமறியல் பிரச்சினை குறித்தும் பேசினர்.
ஒரு சில காரணங்களால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் விரைவில் அனைத்தையும் சீர் செய்வதாக உறுதி கூறினர். இதனை ஏற்று கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.