சிவகிரியில் நடந்த சிலை உடைப்பு சம்பவத்தில் நிதிநிறுவன அதிபர் உள்பட 2 பேர் கைது
சிவகிரி சிலை உடைப்பு சம்பவத்தில், நிதிநிறுவன அதிபர் உள்பட 2 பேைர போலீசார் கைது செய்தனர். கோவில் அருகே மீண்டும் கும்பல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகிரி,
சிவகிரி தலையநல்லூரில் புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறாவான காளியண்ணன் கோவில் சிவகிரி-கொடுமுடி ரோட்டில் தொப்பபாளையம் என்ற இடத்தில் உள்ளது.
இந்த கோவிலில் சிலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதற்கிடையே ஒரு தரப்பினர் கோவிலில் காளியண்ணனுக்கு புதியசிலை அமைத்தனர், இந்தநிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் 7 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி கோவிலுக்குள் நுழைந்து சம்மட்டியால் சிலைகளை அடித்து உடைத்துவிட்டு சென்றார்கள்.
இதனால் சிவகிரியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்திவு செய்து, சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோட்டைகாட்டுவலசு கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 43) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தார்கள். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 6 பேரை வலைவீசி தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி, ஊஞ்சலூர் அருகே உள்ள கொம்பனைபுதூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சதாசிவம் (47), நம்பியூர் அருகே உள்ள பொங்கியானூரை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி (63) ஆகிய இருவரையும் ஊஞ்சலூர் அடுத்த ஆராம்பாளையம் பஸ்நிறுத்தத்தில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தார்கள். தொடர்ந்து இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் சிலை உடைக்கப்பட்ட சிவகிரி காளியண்ணன் கோவில் முன்பு நேற்று காலை ஏராளமானோர் திரண்டனர். நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சிவகிரியில் குவிக்கப்பட்டார்கள். அம்மன் கோவில், சந்தைமேடு, கைகாட்டி, தொப்பபாளையம் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதைத்தொடர்ந்து திரண்டு இருந்த மக்கள் மத்தியில் கிராமக்குழு தலைவர் ஆறுமுகம் பேசினார். அப்போது அவர், 'வழிபாட்டுக்கு உரிய நம்முடைய முன்னோர்களின் சிலையை மர்ம கும்பல் உடைத்துவிட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும். மேலும் உடைக்கப்பட்ட அதே இடத்தில் புதிய சிலைகள் அமைக்கவும், பூஜை நடத்தவும் போலீசார் அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதன்பின்னர் கூட்டம் கலையத் தொடங்கியது.