தீபாவளி போனஸ் தொகை, முன்பணத்தை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசால் அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகை, முன்பணத்தை உடனடியாக வழங்க கோரி பெரம் பலூரில் அரசு போக்கு வரத்துத்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
தமிழக அரசால் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகை, முன்பணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று அதிகாலை பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
தீபாவளி போனஸ்
ஆர்ப்பாட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ் 20 சதவீதத்தையும், முன்பணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க வேண்டும். மற்ற துறையில் உள்ள ஊழியர் களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசே ஓய்வூதிய திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.