வானவில்: வந்துவிட்டது லம்போர்கினி ஹரிகேன் எவோ ஸ்பைடர்

விலை அதிகமான கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் தற்போது ‘எவோ ஸ்பைடர்’ என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4.10 கோடியில் ஆரம்பமாகிறது.

Update: 2019-10-23 10:55 GMT
கடந்த பிப்ரவரியில் இந்நிறுவனம் ‘எவோ’ என்ற பெயரிலான மாடலை சுமார் ரூ.3.73 கோடி விலையில் அறிமுகம் செய்தது. தற்போது அதைவிட விலை அதிகமான மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய மாடல் கார் 5.2 லிட்டர் என்ஜினைக் கொண்டது. 640 ஹெச்.பி. திறன் 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 7 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர்பாக்சுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்டார்ட் செய்த 3.1 விநாடியில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 17 விநாடிகளில் திறந்து மூடும் அளவுக்கு விரைவாக செயல்படும். இந்த பிரிவில் பெராரி 488 மற்றும் ஆடி ஆர் 8 ஸ்பைடர் ஆகிய மாடல்கள் இந்தக் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் தனது 50-வது காரை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

மேலும் செய்திகள்