திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோாிக்கை

திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-20 22:15 GMT
திருப்பூர், 

திருப்பூரில் பல பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் பல பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்ல கோர்ட்டு வீதி முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியாக பல வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதேபோல் இந்த பகுதியில் உள்ள தாலுகா கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

திருப்பூரில் முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் சாலை குண்டும்,குழியுமாக காணப்படுகிறது.

தற்போது மழை காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. திருப்பூர் கோர்ட்டு வீதி மற்றும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கோர்ட்டுக்கு தினமும் பொதுமக்கள், வக்கீல்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர். அவர்கள் தேங்கி நிற்கும் மழைநீாில் செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்