மனநலம் குன்றிய சிறுவன் மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மனநலம் குன்றிய சிறுவன் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மேலூர் கோட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மகன் சிவனேஷ் (வயது 14). மனவளர்ச்சி குன்றியவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் மேலூருக்கு குடிவந் தோம். அழகர்கோவில் அருகேயுள்ள மனநலம் குன்றியோருக்கான பள்ளியில் எனது மகனை சேர்த்து படிக்க வைத்தோம். கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் எனது மகனை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எனது மகன் குறித்து எந்த தகவலும் இல்லை.
எனது வீட்டின் அருகே கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றை பார்த்தால் கூட எனது மகன் எங்கு சென்றான், யாரும் கடத்தி சென்றார்களா என்பது தெரியும். போதுமான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கடத்தி வடமாநிலங்களில் கொத்தடிமையாக வைத்து, உடல் பாகங்களை திருடி விற்பனை செய்வதாக தகவல் பரவுகிறது. எனவே மேலூர் போலீசில் உள்ள வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “மேலூர் போலீசாரிடம் இருந்து வழக்கை திரும்ப பெற்று மதுரை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன்பின் அவர்கள் இந்த வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.