கிரு‌‌ஷ்ணகிரி, ஊத்தங்கரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிரு‌‌ஷ்ணகிரி, ஊத்தங்கரையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-19 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊத்தங்கரை தாசில்தார் சித்ராவை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்தும், பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசு பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னசாமி, துணை தலைவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, சலீம்பா‌ஷா, மாவட்ட இணை செயலாளர் சக்திவேல், மத்திய செயற்குழு உறுப்பினர் நிர்மலா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

அதே போல ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குமண்டல தேர்தல் துணை தாசில்தார் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். நில அளவையர் சங்கம் சதாசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் வட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் ஆசைத்தம்பி, கிராம உதவியாளர் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் வெடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது நில அளவை செய்வதற்காக சென்றிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் வருவாய்த்துறை சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், நில அளவையர் சங்கம், கிராம உதவியாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்