நாகர்கோவில் அருகே தொடர் மழையால் சாலை துண்டிப்பு

நாகர்கோவில் அருகே தொடர் மழையால் சாலை துண்டிக்கப்பட்டது.

Update: 2019-10-19 22:00 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. மேலும் சில வீடுகளும் இடிந்தன. இந்தநிலையில் நேற்று தம்மத்துகோணத்தில் இருந்து வளர்நகர் செல்லும் சாலை திடீரென துண்டிக்கப்பட்டு, பெரிய பள்ளத்தை போன்று காட்சி அளிக்கிறது.

இந்த சாலையையொட்டிபடி தான் கால்வாய் செல்கிறது. கால்வாயின் கரையாக இருந்த சாலை அரிக்கப்பட்டு துண்டித்த நிலையில் இருப்பதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை.

மேலும் ஒருவர் மட்டும் நடந்து செல்லும் பாதையாக உள்ளது. இதில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் நடந்து சென்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்