தீபாவளி பண்டிகை விற்பனைக்காக இனிப்பு-பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரம்
தீபாவளி பண்டிகை விற்பனைக்காக இனிப்பு - பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சென்னை,
என்னதான் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், இனிப்பு இல்லா தீபாவளியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சிறியோர் முதல் முதியோர் வரை இனிப்புடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்வார்கள். ஆசையை அடக்க முடியாமல் இனிப்புகள் தின்றுவிட்டு மறுநாள் சர்க்கரையின் அளவை கணக்கிட ஆஸ்பத்திரிகளில் குவியும் முதியோர் கூட்டமே அதற்கு சாட்சி.
தீபாவளி தினத்தன்று அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதே நமது வழக்கம். அந்தவகையில் தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்புகள் மற்றும் பலகாரங்களின் தேவை அதிகமாகவே இருக்கும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் கடைகளில் தற்போது இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இனிப்புகள்-பலகாரங்கள் தயாரிப்பில் சென்னை மயிலாப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு பல வீடுகளில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்காக இனிப்பு-பலகாரங்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.
அந்தவகையில் காஜூ கட்லி, பிஸ்தா ரோல், கேசர் பேடா, ஸ்பெஷல் மைசூர்பாகு, ஸ்பெஷல் லட்டு, ஜாங்கிரி, பாம்பே அல்வா, பாதுஷா, லட்டு, மைசூர்பாகு, போர்ன்விட்டா கேக், அதிரசம், மா லட்டு, ரவா லட்டு, மிக்ஸர், ஸ்பெஷல் காராசேவ், காரா சேவ், ரிப்பன் பக்கோடா, கை முறுக்கு, தேன்குழல், தட்டை போன்ற இனிப்புகள்-பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மயிலாப்பூரை சேர்ந்த ஜி.பாலசுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது:-
அம்மா கைப்பக்குவத்தில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இனிப்புகள்-பலகாரங்கள் செய்வதால் நாங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிப்பு மும்முரம் அடைந்திருக்கிறது. ஆர்டர்களும் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.