தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம்,
தாராபுரம் வடதாரை காமன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிட்டுச்சாமி. இவரது மகன் சூர்யா (வயது 22). இவர் பட்டப்படிப்பு படித்தபோது, அதிக அளவில் அரியர் வைத்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடியே படித்து, அரியர்களை எழுதி வந்துள்ளார். இருப்பினும் அவரால்முழுமையாக தேர்ச்சி பெறமுடியவில்லை.
இதனால் மனமுடைந்த சூர்யா, அடிக்கடி பெற்றோரிடம் வாழப்பிடிக்கவில்லை என்று கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீத்தக்காடு அமராவதி ஆற்றங்கரையில் உள்ள, சங்கலி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம்கூறிவிட்டுவெளியே சென்றார். கோவிலுக்கு சென்றவர் பின்னர்வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் மாலை 4 மணி அளவில் அவருடைய தாயாருக்கு மாணவர் சூர்யா போன்செய்தார். அப்போது, தேர்வில் தேர்ச்சி பெறாததால் விஷம் குடித்துவிட்டதாக கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சூர்யாவின் தாயார், தனது உறவினர்களுடன் சீத்தக்காடு பகுதிக்கு விரைந்தார். அங்கு மயக்கத்தில் விழுந்து கிடந்த சூர்யாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு சூர்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.