திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது வங்கி கிளார்க் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்
வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்,
வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெறுகிறது.
வங்கி கிளார்க் பதவி
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தும் பொது துறை வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வு திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 12 ஆயிரத்து 75 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வுக்கு www.ibps என்ற இணையதளங்களின் வழியாக கடந்த 9-ந் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
தகுதி-பயிற்சி வகுப்பு
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. சிறந்த வல்லுனர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.
தங்கும் வசதி
பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரம் பயிற்சி வகுப்பின் முதல் நாள் 7.11.2019 அன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4 ஆயிரத்துக்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர்- 628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 31.10.2019 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். தொலைபேசி எண் 04639-242998
அலைபேசி எண் 94420 55243, 86829 85148