ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரத்தில் முடிவு; சிறைத்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் 3 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனது மகன் ரவிச்சந்திரன் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதுவரை எனது மகனுக்கு 4 முறை மட்டுமே பரோல் அளிக்கப்பட்டது. 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் கூட முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அரசியல் பிரச்சினை காரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான எனது மகன் உள்ளிட்டோர் 27 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே உரிய முடிவு எடுக்கலாம் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அது தொடர்பான விவகாரம் தமிழக கவர்னரின் முடிவுக்காக தற்போது வரை காத்திருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
ரவிச்சந்திரனுக்கு நீண்ட நாள் பரோல் கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதை விசாரித்தபோது, நீண்டநாள் பரோல் வழங்க சாத்தியமில்லை என்றும், புதிதாக மனு அளித்தால் ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு மாதம் பரோல் கேட்டு புதிதாக மனு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 27-ந் தேதி எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண பரோல் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை.
எனவே அந்த மனு அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரர் மகனுக்கு பரோல் வழங்குவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலித்து 3 வாரத்தில் உரிய முடிவு எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.