அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். முதலாமாண்டில் 100 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த மாணவர் சேர்க்கையை 150-ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இதுெதாடர்பாக ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என்பதை பற்றி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு
அதன்படி நேற்று காலை 10 மணிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் குழு சார்பில் மருத்துவக்குழு அதிகாரிகள் கமல், ராஜேஷ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கல்லூரியில் ஆய்வு நடத்தினர். அப்போது, கல்லூரி வளாகம், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூாி டீன் பாலாஜிநாதன், துணை முதல்வர் லியோ டேவிட்சன் மற்றும் பல துறையைச் சார்ந்த டாக்டர்களும் உடனிருந்தனர்.
அறிக்கை
கவுன்சில் குழு ஆய்வானது மாலை 4 மணி வரை நடைபெற்றது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை 100-ல் இருந்து 150-ஆக அதிகரிப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை அளிப்பார்கள்.
அந்த அறிக்கையின்படி வருகிற கல்வியாண்டு முதல் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படுமா? என்பது தெரியவரும்.