திட்டக்குடி, பரங்கிப்பேட்டை பகுதியில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

திட்டக்குடி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில் அ.ம.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2019-10-13 22:15 GMT
திட்டக்குடி,

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் திட்டக்குடியில் அ.ம.மு.க.சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திட்டக்குடி நகர செயலாளர் மார்க்கெட் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கலையரசன், பேரவை செயலாளர் செந்தில்குமார், ராஜா, அவைத்தலைவர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி முருகேசன் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில் பரங்கிப்பேட்டையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ராமமோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தெய்வீகன், கணேசன், கல்யாணம், மீனவரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஷாஜகான் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஹபிபுல்லா, நகர செயலாளர் மணி, கார்த்திக், ஜெயகுமார், திருமான், பாண்டியன், ரவிச்சந்திரன், அசோக், வேலாயுதம், பரமசிவம், சாகுல்அமீது, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம், கீரப்பாளையம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளிலும் மாவட்ட செயலாளர் பாலமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

மேலும் செய்திகள்