ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் தீபாவளி கூட்டத்தால் திணறிய கடைவீதி
தீபாவளியையொட்டி ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க வந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் திருச்சி கடைவீதியில் திணறல் ஏற்பட்டது.
மலைக்கோட்டை,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. தீபாவளி அன்று இந்துக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள். இதனால் திருச்சி கடைவீதியில் உள்ள கடைகளில் புத்தாடை எடுக்க வருபவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
கடைவீதியில் கூட்டம்
திருச்சி மெயின்கார்டு கேட், என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, மேலப்புலிவார்டு சாலை, சிங்கார தோப்பு, சின்ன கடைவீதி பகுதியில் தான் பெரும்பாலான ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெரிய கடைவீதி உள்ளிட்ட கடைவீதியில் காலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பொருட்கள் வாங்குவதற்காக வந்தனர். இதனால் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பலத்த மழை
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக என்.எஸ்.பி. சாலையில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பொருட்கள் வாங்குவதற்காக வரும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கு தடை விதித்தனர். இதனால் என்.எஸ்.பி. சாலை, சிங்கார தோப்பு பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அப்போது மக்கள் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்குவதற்கு இடம் தேடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
போக்குவரத்து நெருக்கடி
அப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லாததால் கார், ஆட்டோ, இரு சக்கரவாகனங்கள் என எல்லா வாகனங்களும் கடைவீதியில் அணிவகுத்தன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் இந்த நெருக்கடி நீடித்தது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் பாதுகாப்பு பணிக்காக சென்ற போலீசார் இன்னும் பணிக்கு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களால் கடைவீதியில் பாதுகாப்பு பணிக்கு போதுமான போலீசார் நேற்று வரவில்லை என தெரிகிறது. பொதுவாக தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே தெப்பக்குளம் கார்னரில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, புறக்காவல் நிலையம் அமைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புறக்காவல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகளும் இப்போது தான் நடந்து வருகின்றன. இதன் காரணமாகவும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.