கண்ணங்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் - மானாமதுரையில் நாளை மின்தடை

கண்ணங்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நாளை மானாமதுரையில் மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2019-10-08 22:00 GMT
மானாமதுரை , 

தேவகோட்டை உப கோட்டத்திற்குட்பட்ட பூசலாகுடி துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர்.

நாரணமங்கலம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரலப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன் வயல், தாழையூர் மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் இருக்காது என உதவி மின்செயற்பொறியாளர் சாத்தப்பன் தெரிவித்துள்ளார்.

இதேபோல மானாமதுரை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதையொட்டி மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிகுளம், தெ.புதுகோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்