தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரு.9 லட்சம் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காணை வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் திண்டிவனம் சலவாதியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. அதை எண்ணிப்பார்த்தபோது ரூ.9 லட்சத்து 18 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்தவர்களிடம் பறக்கும்படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் கிருஷ்ணசாமி , திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி ஆகியோர் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி அந்த பணத்தை எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, திண்டிவனம் தாசில்தார் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மாலை விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தென்னமாதேவி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான தனி தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான போலீசார் முருகன், கதிர்வேல், ஜோசப் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வேனுக்குள் 650 எவர்சில்வர் பாத்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வேனில் இருந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் விக்கிரவாண்டி அருகே தென்பேர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (வயது 30), அவருடன் வந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் (58) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தென்பேரை சேர்ந்த சரவணன் என்பவருடைய பால் விற்பனையக உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச்செல்வதாக இருவரும் தெரிவித்தனர். இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் அந்த பாத்திரங்களையும் மற்றும் வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் அலுவலரான தாசில்தார் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.