ஆயுத பூஜையின்போது வேனை சுத்தம் செய்வதில் தகராறு: கத்தியால் குத்தி டிரைவர் கொலை
சேவூர் அருகே ஆயுத பூஜையின்போது வேனை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேவூர்,
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்கிற பொறுமை ராஜன்(வயது42). இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஜெயலட்சுமி மற்றும் ஜெயமணி என இரு மகள்களும் ஜெகன் என்ற மகனும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே வேட்டுவபாளையம் கிராமத்தில் குடியிருந்து கொண்டு பால் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பால் வேனை ஓட்டி வந்தார்.
இதே பால் வியாபாரியின் மற்றொரு வேனை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் ஓட்டி வருகிறார். இவரும் குடும்பத்துடன் வேட்டுவபாளையத்தில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் ஆயுதபூஜை தினத்தன்று சின்னத்தம்பி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் அவரவர் ஓட்டும் வேனைசுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டனுடன் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை, சின்னத்தம்பி அழைத்து, தனது வேனை கழுவ உதவி செய்யுமாறு கூறினார். அதற்கு மணிகண்டன் என்னுடைய ஆளை நீ ஏன் கூப்பிட்டு நீ ஓட்டும் வேனை கழுவ சொல்லுகிறாய் என கேட்டுள்ளார். உடனே இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதையறிந்த பால் வியாபாரி அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற இருவருக்கும் சிறிது நேரத்திலேயே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது. சின்னத்தம்பி அருகிலிருந்த கட்டையால் மணிகண்டனை தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சின்னத்தம்பியின் மார்பில் இரண்டுமுறை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சின்னத்தம்பியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னத்தம்பி உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சின்னத் தம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகிறார்கள். பால்வேன் டிரைவரை அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு டிரைவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.