வாழப்பாடி அருகே, கோவிலுக்கு சொத்தை எழுதிக்கொடுத்த விவசாயி கொலை; மகன் கைது

வாழப்பாடி அருகே, கோவிலுக்கு சொத்தை எழுதிக்கொடுத்ததால் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-05 22:45 GMT
வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 75). விவசாயி. இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ரமேஷ் (50), ஜெகதீஷ் (45) என்ற 2 மகன்களும், மஞ்சுளா (40), செல்வி (37) என 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ரங்கன், அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு 25 சென்ட் நிலத்தையும், ரூ.1 லட்சத்தையும் எழுதி கொடுத்துள்ளார். இதையறிந்த ரமேஷ் வீட்டுக்கு வந்து, என்னிடம் கேட்காமல் எப்படி சொத்தை கோவிலுக்கு எழுதிக்கொடுக்கலாம் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தகராறு முற்றிய நிலையில் ரமேஷ் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து தந்தை ரங்கனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே, கோவிலுக்கு சொத்தை எழுதிக்கொடுத்ததால் விவசாயியை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்