ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகராட்சி ஆணையர் சந்திரசேகர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது அண்ணாசிலையில் தொடங்கி, திருச்சிரோடு, 4 ரோடு வழியாக காந்தி பூங்காவிற்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், பணி ஆய்வாளர் மணிகண்டன், பாண்டியன் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், ராயல் சென்டினல் லயன்ஸ் சங்கம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
துண்டு பிரசுரங்கள் வினியோகம்
இதேபோல் ஆண்டிமடம் பகுதி வணிகர்கள் நல சங்கம் சார்பில் ஆண்டிமடம் கடைவீதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட துணை தலைவர் சின்னப்பராஜ் தலைமையில், வணிகர்கள் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் ஆண்டிமடம் வணிகர்கள் நல சங்க தலைவர் மோகன், பொருளாளர் சம்பத், வணிகர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.