ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நவீன நிழற்குடை - மிதவை சாதனம்
சாலை ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்கும், மீன் விற்பனை செய்பவர்களுக்கும் நவீன நிழற்குடை மற்றும் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உயிர்காக்கும் மிதவை சாதனம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் மீனவர்களுக்கான படகுகள், நவீன உபகரணங்கள், தற்போதைய தேவையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள உயிர்காக்கும் சாதனங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது சாலை ஓரத்தில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு பைபர் தரத்திலான புதிய நிழற்குடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் வெயிலிலும், மழையிலும் மீன் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்காக இந்த நிழற்குடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பு உள்ளது. அதனுடன் இணைக்கப்பட்ட பேட்டரி மின் சேமிப்புக்கலன் மூலம் 4 மணி நேரம் எரியும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவிலும் பாதிப்பின்றி மீன் விற்பனை செய்யலாம். 14 கிலோ எடை கொண்ட இதனை எளிதாக மடக்கி எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதன் விலை ரூ.7,000 ஆகும்.
இதுதவிர, கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் படகில் எடுத்துச்செல்லும் வகையில் உயிர்காக்கும் மிதவை சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளாகும் சமயங்களில் ஒரே நேரத்தில் 8 மீனவர்கள் தப்பித்து உயிர் பிழைக்கும் வகையில் இந்த மிதவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25,000 ஆகும்.
படகு கவிழ்ந்து மீனவர்கள் அதிக அளவில் உயிரிழந்து கரை ஒதுங்கி வரும் நிலையில் மீனவர்களை காக்கும் வகையில் இந்த மிதவை சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.