பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-03 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கரூர் கிளை செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். கிளை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. துணை பொது செயலாளர் பாலசுப்ரமணியன், கிளை செயலாளர் சிறும்பண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மத்திய சங்க துணை தலைவர் ஹரீந்தரன், ஏ.ஐ.டி.யு.சி. சம்மேளன துணை தலைவர் செல்வராஜ், ஐ.என்.டி.யு.சி. கரூர் மண்டல செயலாளர் கிரு‌‌ஷ்ணன் உள்பட போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி போனஸ்

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக தொடங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். அட்வான்சாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் காமராஜ் நன்றி கூறினார்.

இேத கோரிக்கையை வலியுறுத்தி அரவக்குறிச்சி போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்