ஜமுனாமரத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்

ஜமுனாமரத்தூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2019-10-02 22:30 GMT
போளூர், 

ஜமுனாமரத்தூரை அடுத்த பெருங்கட்டூரை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகன் சீனுவாசன். இவருக்கும், மேல்நெல்லிமரத்தூரை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகள் சத்யாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சீனுவாசன் வரதட்சணை கேட்டு சத்யாவை துன்புறுத்தியதாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜமுனாமரத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்யாவின் தாயார் செல்வி போலீசில் கொடுத்துள்ள புகாரில், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சத்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்