மக்களுக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்; மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் அறிவிப்பு
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் தலைவர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காமராஜர் சிலை சதுக்கத்திற்கு சென்றனர். காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது இயக்கத்தில் ஏற்கனவே நிறைய தவறு செய்துவிட்டேன். என்னைச் சுற்றி வந்தவர்களை அவர்தான் எனது தளபதி, இவர்தான் எனது தளபதி என்று கூறிவிட்டேன். தற்போது அதுபோல் செய்யாமல் தேர்தல் முடிந்தவுடன்தான் யார், யாருக்கு என்னென்ன பொறுப்பு என பரிசீலிப்பேன். இப்போது கட்சியில் நான் உள்ளிட்ட அனைவரும் சரிநிகர் சமம். நானும் உங்களில் ஒருவன். கட்சியை, மக்களை, தொண்டர்களை பயன்படுத்தி சொந்த லாபத்தை பெரிதாக்கிக் கொண்டு ஓடிப்போனவர்கள் ஏராளம்.
மக்களிடம் கொள்ளை அடிக்க நினைப்பவர்கள் யாரும் என் கட்சியில் வேண்டாம், அதுபோன்ற எண்ணம் உள்ளவர்கள் ஓடிப்போய்விடுங்கள். எனக்கு உழைக்க வேண்டாம், மக்களுக்காக உழையுங்கள்.
மக்களுக்காக உழைப்பவர்களை, மக்களின் துயர்கள் நீக்கி, கண்ணீரை துடைப்பவர்கள் யாராக இருந்தாலும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவேன். என் பழைய வரலாற்றில் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்தான் அமைச்சர்கள் ஆயினர். பதவி கொடுத்து அழகு பார்த்தேன். மக்களுக்கு உழைக்கும் மனப்பாங்கு இருந்தால் மட்டுமே முக்கியத்துவம் தருவேன். நான் தான் கண்ணனின் தளபதி என்று யார் கூறினாலும் நம்பாதீர்கள். என் தளபதியை விரைவில் நானே அறிவிப்பேன். மக்களுக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்.
இவ்வாறு அவர் கூறினார்.