நீர்நிலைகளை மாசுபடுத்தினால் கடும் தண்டனை - மாசு கட்டுப்பாட்டு குழு எச்சரிக்கை
நீர்நிலைகளை மாசுபடுத்தினால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழு இயக்குனர் ஸ்மித்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுண்ணாம்பாறு மற்றும் அதனை ஒட்டியுள்ள உப்பங் கழியில் கடந்த சில நாட்களாக மீன்கள் செத்து மிதந்தன. இது தொடர்பாக புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுவின் தலைவர் அர்ஜுன் ஷர்மா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உப்பங்கழி மற்றும் சுண்ணாம்பாற்றில் கடல்நீர் கலக்காததால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறந்ததற்கு காரணம் என்று அறியப்பட்டது. வீட்டு கழிவுநீர் இவற்றில் கலப்பதால் பாசிகள் அதிகம் வளர்வதும், ஆக்சிஜன் அளவு குறைவதற்கு ஒரு காரணமாகும் என்பது தெரியவந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் தடுப்பை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும், அப்போதுதான் கடல் நீர் ஆற்றில் நுழையும். அந்த பகுதியில் உள்ள கழிவுநீர், பாசன வாய்க்கால் மூலமாக வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் விடப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும். இதனை பாசன பிரிவு நிர்வாக பொறியாளர் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் செயல்படுத்த வேண்டும்.
சுகாதார சீர்கேடு மற்றும் நீரில் மேலும் ஆக்சிஜன் அளவு குறைவதை தவிர்ப்பதற்கு இறந்து மிதக்கும் மீன்களை அகற்றி ஆற்றை சுத்தம் செய்வதை மீன்வளத்துறை மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உறுதி செய்யவேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீரை விடும் உணவகங்கள், ஆட்டோ மொபைல், சேவை நிலையம் மற்றும் வேறு ஏதாவது வகையில் மாசுபடுத்துபவர்களுக்கு புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவால் கடுமையான தண்டனை வழங்குவது.
மேற்கண்டவாறு இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.