தேனி, துணி காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு

தேனி, துணிகளை துவைத்து கொடியில் காய வைத்த போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-10-02 22:00 GMT
தேனி,

தேனி பொம்மையகவுண்டன்பட்டி பள்ளிஓடைத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). இவருடைய மகள் சினேகா (18). நேற்று காலையில் இவர் தனது வீட்டில் துணிகளை துவைத்து கொடியில் காய வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்சார மீட்டர் பெட்டி அருகில் உள்ள கொடியில் மின்கசிவு இருந்துள்ளது. இதை அறியாமல் அந்த கொடியில் அவர் துணிகளை காய வைத்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. 

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகன் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்