கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் செம்மண்டலம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் தேவனாம்பட்டினம் மின்னூட்டிகளில் புதிதாக புதைவட பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நிறுவப்பட உள்ளது. இதனால் கடலூர் அண்ணாநகர், ஆர்.வி.எஸ்.நகர், எம்.ஜி.ஆர். நகர், தங்கபழம்நகர், சித்ராநகர், ராமசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
அதேபோல் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுபாளையம், வண்டிக்குப்பம், மேற்குராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் நெல்லிக்குப்பம் நகர பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவர்நகர், எவரட்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர்கள் (கடலூர்) ராமலிங்கம், லீனா (நெல்லிக்குப்பம்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.