ஆரோவில் அருகே, தனியார் நிறுவன பெண் ஊழியர் கடத்தல் - சென்னை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-10-01 22:00 GMT
விழுப்புரம், 

ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண், பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த அந்த பெண், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் தங்கள் மகளை தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரை காணவில்லை.

பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்கள் மகளை, சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் இமானுவேல் (வயது 22) என்பவர் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திச்சென்ற இமானுவேலையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்