மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை; மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
போலீஸ் நிலையம் அருகில் மனைவியை வெட்டிக்கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த 2011-ம் ஆண்டு சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீதான விசாரணைக்கு அவர்கள் இருவரும் வந்துள்ளனர். அப்போது முத்துலட்சுமியை பார்த்து ஆத்திரமடைந்த கண்ணன், தான் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியை வெட்டிக்கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கம் ஆஜரானார். முடிவில், கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா நேற்று தீர்ப்பளித்தார். பின்னர் அவர்களின் 3 மகன்களும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேசன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் மற்றும் குழுவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.