மக்கள் மீது மாநில அரசுக்கு அக்கறை இல்லை - முன்னாள் மந்திரி யு.டி.காதர் பேட்டி

மக்கள் மீது மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்று முன்னாள் மந்திரி யு.டி.காதர் கூறினார்.

Update: 2019-09-29 23:15 GMT
துமகூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆளுங்கட்சியான பா.ஜனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவிட்டதால், மாநில அரசு மக்களின் பிரச்சினைகளை மறந்துவிட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித நிவாரண பணிகளும் நடைபெறவில்லை. மக்கள் மீது இந்த மாநில அரசுக்கு அக்கறை இல்லை. வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதல்-மந்திரியை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள் ளது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு எந்த திட்டத்தையும் இந்த அரசு அமல்படுத்தவில்லை. இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. தொழிற்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கிகள் அடிக்கடி விவசாயிகளுக்கு நோட்டீசு வழங்குகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு மவுனம் காத்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிதி உதவி வழங்கவில்லை. நமது உரிமையை கேட்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது.

இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.

மேலும் செய்திகள்