புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்லவன் குளக்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2019-09-28 22:30 GMT
புதுக்கோட்டை,

ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண்கள் இறந்த தங்கள் குடும்ப முன்னோர்களுக்காக விரதம் மேற்கொண்டு நீர்நிலைகள் அருகில் பல்வேறு பொருட்கள் வைத்து தர்ப்பணம் கொடுபது வழக்கமாக உள்ளது. ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் புரட்டாசி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில் நேற்று புரட்டாசி அமாவாசை என்பதால் காலை முதல் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோவில் அருகில் உள்ள பல்லவன் குளக்கரையில் பொதுமக்கள் திரளாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆண்கள் விரதமிருந்து...

இதையொட்டி ஆண்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த பெற்றோர், தாத்தா, பாட்டி என தங்கள் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை குளக்கரையில் வைத்து பூஜைகள் செய்து திதி கொடுத்தனர். புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரளானவர்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதைப்போல திருவரங்குளதில் உள்ள திருக்குளக்கரை, காசிக்கு வீசம்கூட என்ற ழைக்கப்படும் திருவிடையார்பட்டி திருமூலநாதன் கோவில் அருகே உள்ள வெள்ளாற்றங்கரை ஆகிய இடங்களில் காலை முதல் பொதுமக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்